போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      சென்னை

சென்னையில் ஒரு கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து, அதன் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்று தருவதாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்ததன்பேரில், இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு..கா.விசுவநாதன் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டார்.

விசாரணை

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி, அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய காவல்குழுவினர் மேற்படி புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டார். தீவிர புலன் விசாரணை காரணமாக போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் தயார் செய்த குற்ற

வாளி ராமு (54), /பெ.ஆறுமுகம், திருவல்லிக்கேணி என்பவரை மேற்படி மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து, போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்த போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் குற்றவாளி ராமு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட ராமுவுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து