முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் களைகட்டும் சீசன்: சாரல் மழையால் குளு குளு நிலைமை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருநெல்வேலி

குற்றாலத்தில் சாரல் மழை தொடர்வதால் குளு குளு நிலைமை நீடித்து சீசன் களைகட்டி வருகின்றது.குற்றாலத்தில் சீசன் கடந்த மாதம் இறுதி வாரத்தில் துவங்கினாலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக சாரல் மழை இல்லாமல் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்ததால் சீசன் டல் அடித்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மேல் மழை மேக கூட்டங்கள் பொதிகை மலையை வலம் வந்து இதமான தென்றல் காற்று வீச சாரல் மழையை பொழிந்தது. தொடர்ந்து மாலை வரை சாரல் மழை விட்டு விட்டு தொடர்ந்தது.

 குளு குளு நிலை

இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. வறண்டு காணப்பட்ட பழையகுற்றால அருவியிலும் குறைவாக தண்ணீர் விழத் துவங்கியது. சுhரல் மழை இரவு முழுவதும் நீடித்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.சாரல் மழையால் குளு குளு நிலையை நீடித்து வருகின்றது. இதனால் சீசன் களை கட்டி வருகின்றது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் அருவிகளில் குளிக்க வரிசையில் நிற்கின்றனர். அப்போது அவர்கள் சாரல் மழையில் நனைந்து தென்றல் காற்று தழுவிச் செல்லும் இயற்கை அழகை ரசித்தபடி நின்றதை காண முடிந்தது.

சீசன் களைகட்டும்

தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்று வீசுவதாலும், சாரல் மழை பன்னீர் தெளிப்பதைப் போன்று பெய்ததாலும் குளிர்ச்சி நிலவியது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சீசன் அருமையாக இருந்து வருகின்றது. அதே நிலை கடந்த வாரமும், இந்த வாரமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து