முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் முப்பெரும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவிலில் சாரதிராம் அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா, சமூகத்தில் தலைசிறந்வர்களை உருவாக்கும் விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

 முப்பெரும் விழா

 சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு ஒய்வு பெற்ற வருமானவரித்துணை ஆணையர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் பொருளாளர் முத்துசங்கரநாராயணன், வேல்ஸ் கல்வி குழும சேர்மன் முருகையா, வையாபுரி மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் சுப்பாராஜ், கோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்செல்வம், எஸ்வி கல்வி குழும சேர்மன் முருகையா, மகாலெட்சுமி மெட்ரிக் பள்ளி தாளாளர் இலட்சுமணன், அரசு மருத்தவர் செந்தில்சேகர், டிஎஸ்பி இராஜேந்திரன், ஏவிகே மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.ரதிராம் அறக்கட்டளை நிர்வாகி லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் நகை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் இசக்கிராஜன், ரோட்டரி கிளப் தலைவர் பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், சாரதிராம் இறகு பந்து கழக தலைவர் பட்டமுத்து, வழக்கறிஞர் கணேசன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் ராமசுப்பு, நகர வர்த்தக சங்க தலைவர் முத்தையா, முன்னாளர் கவுன்சிலர் வெள்ளி முருகன், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற எஸ்பி கலியமூர்த்தி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.அவர் பேசும் போது, மாணவ மாணவியர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டி நற்பண்புகள் பற்றியும் தன் வாழ்வில் நடந்த வி~யங்கள் குறித்தும் பேசினார்.

அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்த சாரதிராம் அறக்கட்டளை மற்றும் செங்குந்தர் எழுச்சி பேரவை உறுப்பினர்கள் 102பேருக்கு அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.  கோமதிஅம்பாள் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கர்ராம், நாராயணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.முடிவில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அருணகிரி நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து