முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14ம் தேதி சிவராமமங்களம் பெரிய சாஸ்தா அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      தூத்துக்குடி

சிவராமமங்களம் பெரிய சாஸ்தா அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவராமமங்களத்தில்  சிறப்புபெற்ற பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய சாஸ்தா அய்யனார் கோவிலில் விநாயகர், சிவனணைந்தப்பெருமாள், பிரம்மசக்தி, பேச்சியம்மன், தளவாய் மாடன், தளவாய் மாடத்தி, கருப்பசாமி, சுடலை மாடன், இசக்கியம்மன் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.

 பலஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவிலிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆண்டில் கோவில் திருப்பணிக்குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளத்தொடர்ந்து கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி(புதன்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.கும்பாபிஷேக விழாவானது நாளை(திங்கட்கிழமை) காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்குகிறது. அன்று மாலை 5மணிக்கு புண்யாகவாசனம் பிரவேச பலி, கலாகர்ஷனம், முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.13ம் தேதி(செவ்வாய்கிழமை) காலை 8.30மணிக்கு விஷேச சந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலை 6மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதலும், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கிறது.

இரவு 9மணிக்கு சொற்பொழிவாளர் வாசுகிமனோகரனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 14ம் தேதி(புதன்கிழமை) காலை 7மணிக்கு மூர்த்திரக்ஷாபந்தனம், நான்காம்கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளலும், காலை 10.30மணியில் இருந்து 11.30மணிக்குள் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய சாஸ்தா அய்யனார் விமானகோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் சிவன்கோவில் அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர்.கும்பாபிஷேக விழாவில் அம்பலவாண தேசிக பரமாச்சரிய சுவாமிகள், சிவப்பிரகாச தேசிகசத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், திருநாவுக்கரசு தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சென்னை அன்னதானக் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி மற்றும் விழாக்குழு தலைவர் முத்தையா, செயலாளர்  அய்யனார், பொருளாளர் மாரிமுத்து தலைமையில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள், வரிதாரர்கள், பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து