தி.மலையில் வினாத்தாள் அவுட் பாலிடெக்னிக் ஊழியர்கள் 3 பேர் கைது: சிபிசிஐடி அதிகாரிகள் நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo03

 

திருவண்ணாமலையில் பாலிடெக்னிக் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அதே கல்லூரியை சேர்ந்த ஊழியர்கள் 3 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

வினாத்தாள்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வு நடந்தது அதில் ஒரு பாடப்பிரிவின் வினாத்தாள் தேர்வுக்கு முந்தைய தினம் வாட்ஸ் அப்பில வெளியானது இதுகுறித்து ஆரணி தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் தி.மலை கிராமிய காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால் இதில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் சத்திய நாராயணன், குமரவேல், கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வினாத்தாள் வெளியான அதே கல்லூரி ஊழியர்களான கடலூரை சேர்ந்த மது (29) ராஜேஷ் (30) அம்சசங்கர் (32) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர் இதில் இவர்கள் 3 பேரும் பாலிடெக்னிக் வினாத்தாளை அவுட் செய்தது தெரியவந்தது. இவர்களில் மது, ராஜேஷ் இருவரும் அக்கல்லூரியில் பயிற்றுனர்களாகவும் அம்பாசங்கர் உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இவர்களுடன் மேலும் பலரும் தொடர்பு இருப்பதால் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகு மேலும் இதில் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என தெரிகிறது இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து