முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணம், பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடவேண்டும்: தி.மலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

வருங்கால சந்ததிகள் நலமுடன் வாழ பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினம்

திருவண்ணமலை சட்டப்பணிகள் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு மாவட்ட நீதிபதி புகழேந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாராஜா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் அப்போது மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேசுகையில் தற்போது மரங்களை நடுவதைவிட வெட்டுவது அதிகரித்து வருகிறது இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் மழை அளவு குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் நம் சந்ததிகள் நலமுடன் வாழ பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் ஞாபகமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.

விழாவில் பார் அசோசியேஷகன் சங்க தலைவர் வி.ராமகிருஷ்ணன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கே.வி.மனோகரன், அட்வகேட் அசோசியேஷன் சங்க செயலாளர் சேகர் உள்பட வழக்கறிஞர்கள் , நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சையத் ரஜீத் செய்திருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து