முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷெரீப்-ஜி-ஜின்பிங் சந்திப்பு பல முறை நடந்தது: சீனா

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஷாங்கை உச்சிமாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீபம் அதிபர் ஜி ஜின்பிங்கும் பலமுறை சந்தித்து பேசினார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் சீனர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானில் நடைபெற்ற ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசவில்லை என்று செய்தி வெளியானது.

இதை சீனா மறுத்துள்ளது. ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாட்டில் நவாஸ் ஷெரீப்பும் அதிபர் ஜி ஜின்பிங்கும் பலமுறை சந்தித்து பேசினார்கள் என்று சீன நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ ஹாங் நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். அவர்கள் சந்திக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருப்பது அர்த்தமற்றது மட்டுமல்லாது தேவையில்லாதது என்றும் சீனா-பாகிஸ்தான் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. இருநாடுகளிடையே ராஜதந்திர ரீதியாக இந்த உறவு இருக்கிறது என்றும் லூ தெரிவித்துள்ளார்.

அதேசமயத்தில் ஷாங்கை மாநாட்டின்போது ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களை நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார் என்று பாகிஸ்தான் அரசு நியூஸ் ஏஜன்சி தெரிவித்துள்ளது. சீன அதிபருடன் சந்தித்ததாக கூறவில்லை. எதைத்தான் நம்புவது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து