முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்பை வரும் 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி சந்தித்து பேசுகிறார். அப்போது எச்1பி விசா உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின்பு அமெரிக்கர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் விஷயத்தில் அவர் கடுமையாக நடந்துகொள்கிறார். எச்1பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதனால் இந்தியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி உள்ளது.

இந்தநிலையில் அதிபர் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி வாஷிங்டன்னில் உள்ள வெள்ளைமாளிகையில் சந்தித்து பேசுகிறார்.  அல்லது டெக்ஸாஸ் நகரில் உள்ள அமெரிக்காவின் மற்றொரு வெள்ளை மாளிகை என்று கருதப்படும் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது தெரியவில்லை. இந்த மாளிகையில்தான் டிரம்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின்பு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்லவிருப்பது முதல் தடவையாகும். அமெரிக்கா செல்லும் மோடி, டிரம்புடன் எச்1பி விசா உள்பட இருநாடுகளிடையே உள்ள உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள், இந்திய மண்ணில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது, எல்லைப்பகுதியில் சீனாவின் ஆதிக்கம், இந்துமகா சமுத்திர பகுதியில் சீனா ஊடுருவ முயற்சி செய்வது, சீனா-பாகிஸ்தான் இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரிப்பு, அதற்கு தகுந்தவாறு இந்திய ராணுவ பலத்தை பெருக்குவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து டிரம்புடன் மோடி விவாதிக்கிறார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசுவது இருநாடுகளிடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். அமெரிக்காவுக்கு வரும் 25-ம் தேதி செல்லும் மோடி, 26-ம் தேதி டிரம்பை அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேசுகிறார். இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசுவது முதல் தடவையாகும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா செல்லும் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்தவாரம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து