முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவும் வலிமையும் பொருந்திய புதிய தலைமுறையை உருவாக்கிடதமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது கலெக்டர் வெங்கடாசலம் பேச்சு

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி.- தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தேனி ஆர்.சி.பள்ளியிலிருந்து பி.சி.கான்வெண்ட் பள்ளி வரை 500-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தும், தேனி – பங்களாமேடு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்துப் பிரச்சார பலகைகளில் கையெழுத்திட்டும் இன்று (12.06.2017) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், குழந்தைகளின் இயல்பான உரிமைகளை நினைவுபடுத்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை உலகமெங்கும் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் நாள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளின் மூலம் அங்காடிகள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்ட 14-வயதிற்குட்பட்ட குழந்தைகள் மேலும், பேருந்து நிறுத்தம் மற்றும் இரயில் நிலையங்களில் நிராதரவாக உள்ள குழந்தைகள், வீட்டில் இருந்து ஓடிப்போன குழந்தைகள், தெருவோர குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் மீட்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தனியார் டிரஸ்ட் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும், தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் களைத்திடவும், அறிவும் வலிமையும் பொருந்திய புதிய தலைமுறையை உருவாக்கிடவும், கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப்பைகள், காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை, குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அவர்களது கல்விக்காலம் முழுமைக்கும் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள் மீது நீதிமன்றத்தின் வாயிலாக வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை மற்றும் அபராத தொகை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றாமல் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தி.வசந்தி தொழிலாளர் ஆய்வாளர் ராஜ்குமார் மாவட்ட வழங்கல் அலுவலர் தி.ரசிகலா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.கிருஷ்ணவேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) தி.ரோஸ்லின் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பஞ்சு பிச்சைகனி அறிவழகன் சைல்டு லைன் இயக்குநர் இப்ராஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து