முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சைகள் பெற வழிவகை செய்தவர் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா“ அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி புகழாரம்

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவு கட்டடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்  தலைமையில் இன்று (12.06.17) நடைபெற்றது.
 இவ்விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2,93,450 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், 5 பயனாளிகளுக்கு ரூ.21,175 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பில் முதுகுதண்டுவட பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியினையும், 5 தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு நகலினையும், புதுவாழ்வுத்திட்டத்தின் கிழ் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,86,000 மதிப்பிலான வாழ்வாதார நலத்திட்ட உதவிகளையும், 10 நலிவுற்றோர்களுக்கு ரூ.1,95,000 மதிப்பிலான வாழ்வாதார நலத்திட்ட உதவிகளையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64,000 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், 20 ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் வில்லைகளையும், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் வாரிதாரர் 1 நபருக்கு சத்துணவு உதவியாளர் பணிநியமன ஆணையினையும் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது :-
 உயர் வகுப்பினரும், செல்வந்தர்களும் பெற்று வந்த உயர்தர சிகிச்சையினை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கில் மாண்புமிகு அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் செயல்படுத்தியுள்ளார்கள்.
ஏழை, எளிய மக்கள் மருத்துவ சேவைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே பெறும் வகையில் பல்வேறு இடங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கான பணியும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்”- மாண்புமிகு அம்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, தமிழக அரசின் மூலம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரையிலும் மருத்துவ செலவினை பெற இயலும் மேலும்  மருத்துவ காப்பீடு திட்டத்தால் மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது,
திட்டத்தின் கீழ், இதய அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இறைப்பை மற்றும் குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், மற்றும் இரத்த நோய்களுக்கு சிகிச்சை1,328 சிகிச்சை முறைகளும், 133 தொடர் சிகிச்சை வழிமுறைகளும், 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் மற்றும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத்  ்பிய நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக்கான கட்டணமும், இதர செலவினங்களுக்கான தொகையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகலுக்கு 16 பொருட்கள் அடங்கிய ‘அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகமும்” வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவமனைகள் மூலம் பல்வேறு கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெற வழிவகை செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான். மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசு பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என  பால்வளத்துறை அமைச்சர்   தெரிவித்தார்கள்.
 இவ்விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்),  தி.எம்.சந்திரபிரபா ( ில்லிபுத்தூர்), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்  தி.கிருஷ்ணம்மாள், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) மரு.ஆர்.மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  இரா.பாலசுந்தரம், புதுவாழ்வுத்திட்ட அலுவலர்  சண்முகராஜ், தனி வட்டாட்சியர்  சங்கரபாண்டியன், சாத்தூர் வட்டாட்சியர்  தி.முத்துலட்சுமி, உட்பட அரசு அலுவலர்கள், செவிலியர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து