முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கியது யார்? அமெரிக்காவுக்கு ஈரான் சரமாரி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

டெக்கரான் : ஐ.எஸ் இயக்கத்தையை யார் உருவாக்கினார்கள் என்று அமெரிக்காவிடம் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கேள்வி எழுப்பியதோடு அமெரிக்காவை மிகக் கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தூதரக உறவை துண்டித்துள்ளன. ஆனால் ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கத்தாருக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலையில்லா தன்மைக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமெனி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அரசின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அயோதுல்லா அலி காமெனி கூறியிருப்பதாவது,

 "அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே மத்திய கிழக்கு நாடுகளின் நிலையில்லாதன்மைக்கு காரணம். அவர்கள் குழப்பம் விளைவிக்கிறார்கள். அமெரிக்காவிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கியது யார்? அமெரிக்காதான். ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக சண்டையிடுவதாக அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய்.

அமெரிக்காவுடன் இணைவதற்கான எந்த உள்நோக்கமும் ஈரானுக்கு இல்லை. அமெரிக்கா சுதந்திர ஈரானுக்கு எதிராக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படாத ஒன்று. அமெரிக்கா ஒரு தீவிரவாத நாடு மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு. அந்த நாடுடன் எங்களால் உறவு வைத்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து