முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் வருங்காலங்களில் இளைஞர்கள் கருத்தும் காட்சியும் நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

நெல்லையில் அறிவியல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் வருங்காலங்களில் இளைஞர்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்தும் -காட்சியும் நடைபெற்றது.

 பல்வேறு தலைப்புகளில்

நெல்லை சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார் ,வரவேற்பு குழு தலைவர் டி.ஆறுமுகம் வரவேற்று பேசினார் ,சங்க மாவட்ட செயலாளர் எம்.சுரேஷ்குமார் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் ,முன்னதாக அறிவியல் சம்மந்தப்பட்ட போட்டோ கண்காட்சியை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் எம்.சுடலை துவக்கி வைத்தார் ,பாரதியார் பாடலோடு துவங்கிய இந்த விழாவில் எதையும் படிக்கலாம் என்ற தலைப்பில் மதுரை கல்ல்லூரி உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் தினகரன் பேசினார் ,அறிவியல் மக்களுக்கே என்ற தலைப்பில் சென்னை இந்திய கணித அறிவியல் மைய பேராசிரியர் டி.கே.கோவிந்தராஜன் பேசினார் வருங்காலங்களில் இளைஞர்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.தியாகராஜன் , ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.

பலர் பங்கேற்பு

விழாவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற சார்பு நீதிபதி வி.ராமலிங்கம் கலந்து கொண்டு சட்டங்கள் குறித்து விலாவரியாக சிறப்புரையாற்றினார் மேலும் பள்ளி பயிலும் மாணவர்கள் சாதிய அடையாளத்தோடு செயல்பட கூடாது சாதிகளுக்கு அப்பாற்பட்டு திகழ வேண்டும் நிறைவான கல்வி பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என விழாவில் வலியுறுத்தி பேசினார் ,விழாவில் ஓசூர் பி.எம்.சி.டெக் இயக்குனர் முனைவர் எஸ்.சேதுராமனின் மாத்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது , வரவேற்பு குழு பொருளாளர் பி.சங்காரவேலாயுதம் நன்றி கூறினார்.விழாவில் டாக்டர் பாலசங்கர்,டீம் டிரஸ்ட் இயக்குனர் திருமலை முருகன், எம்.சுடலைராஜ்,ஆர்.ஈஸ்வரமூர்த்தி ,எஸ்,கே.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து