முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வல்லராமபுரம் சுப்பையாபாண்டியன்-வெள்ளத்துரைச்சி குடும்பத்தினர் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, வல்லராமபுரம் இந்திய இராணுவ வீரர்கள் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

48 பேருக்கு சிகிச்சை

முகாமிற்கு சங்கரன்கோவில் தாசில்தார் ஹென்றி பீட்டர் தலைமை வகித்தார்.  சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரம்மநாயகம் வீரசிகாமணி உதவி மின்பொறியாளர் செந்தில்குமார், சிவகிரி ஜமீன் ஜெயராணி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  பாண்டியன் சிவஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.  முகாமில் நடுவக்குறிச்சி, வீரசிகாமணி, வல்லராமபுரம், மாயம்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.  இதில் 48 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பலர் பங்கேற்ப

முகாமில் தொழிலதிபர்கள் அய்யாத்துரைபாண்டியன், சிவசெந்தூர்பாண்டியன், காசிப்பாண்டியன், கருத்தப்பாண்டியன், முருகன், தலைமை ஆசிரியர் பார்த்திபன் நடுவக்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்திராதங்கப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வல்லராமபுரம் இராணுவ வீரர்கள் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து