வல்லம் வட்டார விவசாயிகள் இலவச வண்டல் மண் பெற விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      விழுப்புரம்

வல்லம் வட்டாரத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரிகளில் இருந்து விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண், சவுடுமண் மற்றும் களிமண் போன்றவற்றை பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பயன்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

 விண்ணப்பிக்கலாம்

வண்டல் மண்எடுப்பதன் மூலம் குளம் மற்றும் ஏரிகளில் தூர்வாரப்படுவதால் கூடுதலாக மழை நீர்சேகரிக்கப்படுகிறது. விவசாயிகள் வண்டல் மண்ணை அடிப்பதன் மூலமாக நிலத்தின் மண்வளம் காக்கப்பட்டு விவசாய உற்பத்தியையும் பெருக்க முடியும். எனவே வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து விண்ணப்பத்தினைப் பெற்று வட்டாட்சியரிடமிருந்து அனுமதி பெற்று பயனடையகேட்டுக் கொள்ளப்படுகிறது.வண்டல் மண் அடிக்க அரசு பின்வருமாறு அளவு நிர்ணயித்துள்ளது.

பயனடைய வேண்டுகோள்

விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 75 க.மீ (அ) 25 டிராக்டர் லோடு, விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர்புன்செய்நிலத்திற்கு 90 க.மீ (அ) 30 டிராக்டர்லோடு, பொது பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் நன்செய்நிலத்திற்கு 30 க.மீ (அ) 10 டிராக்டர்லோடு, குயவர்கள் பயன்பாட்டிற்கு 60 க.மீ(அ) 20 டிராக்டர் லோடு வீதம் எடுத்துக்கொள்ளலாம். மண் ஏற்றுவதற்கான கட்டணமாக ஒரு டிராக்டர்லோடுக்கு ரூ.105 வங்கி வரைவோலையாக பொதுப்பணித்துறை ஏரிகளுக்கு செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறைஎன்ற பெயரிலும்,  ஊரக வளர்ச்சித்துறை ஏரிகளுக்குசெயற்பொறியாளர்,  ஊரக வளர்ச்சித்துறை, விழுப்புரம் என்ற பெயரிலும் செலுத்தி குளம் மற்றும் ஏரிகளில் இருந்து வண்டல்மண் அடித்து பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து