முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னை சோனியா பெயரில் மானிய விலையில் சிமெண்ட் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில்நடந்த விவாதம் வருமாறு:-

 விவாதம்

அன்பழகன்(அதிமுக):- புதுவை அரசு மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை. 3 மாதமாக கட்டுமான தொழில் முழுமையாக முடங்கி உள்ளது. சொந்த வீடு கட்டுவோர் பணியை பாதியில் நிறுத்தியுள்ளனர். கட்டிட பணிக்கு தேவையான மணல்தட்டுப்பாடு சிமெண்டு விலை ஏற்றம் தான் இதற்கு காரணம். 2 யூனிட் சிமெண்ட் ரூ.35 ஆயிரத்தறிகு விற்கப்படுகிறது. அதுவும் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகிறது. தமிழகத்துடன் பேசி தடையின்றி மணல் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அம்மா சிமெண்ட் என்ற பெயரில்மானிய விலையில் ரூ.180-க்கு சிமெண்ட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். வெளிச்சந்தையில் விற்கப்படும் சிமெண்ட் விலையையும குறைத்துள்ளனர். ஆனால் புதுவையில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்டுமான பணி பாதிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி உள்ளனர். மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நியாயமான விலையில் தடையின்றி மணல் கிடைக்க தமிழக் அரசோடு புதுவை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழகம் போல புதுவையிலும் மானிய விலையில் சிமெண்ட் வழங்க ஏற்பாடுசெய்ய வேண்டும்.  அமைச்சர் கந்தசாமி:- தமிழகத்தில் சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேசியுள்ளனர். அதேபோல புதுவையிலும் சிமெண்ட் விநியோகஸ்தர்களை அழைத்து பேசி விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அன்னை சோனியா பெயரில் மானிய விலையில் சிமெண்ட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்கர்(அதிமுக):- தமிழகத்தில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டு வரப்படும் மணல் கடத்தப்படுவதாக கூறி நமது மாநில போலீசார் பிடிக்கின்றனர். இதை முதலில் தடுங்கள். அமைச்சர் நமச்சிவாயம்:- இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அசோக் ஆனந்த்(என்ஆர்காங்):- மணலுக்கு மாற்றாக எம்சாண்ட் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். அதன் உற்பத்தியை நாம் தொடங்கினாலே மணல் தட்டுப்பாட்டை போக்க முடியும். அதுபோல போலி சிமெண்ட் விற்பனையும் புதுவையில் உள்ளது. இதை அரசு கண்காணித்து தடுக்க வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி:- மணல் தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப் பட்டுள்ளது. அரசு பணிகள் கூட நிறுத்தப் பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில்  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் புதுவைக்கு தேவையான மணலை தருவதாக வாக்குறதி அளித்துள்ளார். அந்த வாக்குறதிபடி மணல் தாருங்கள் என புதுவை அரசு சார்பாக கடிதம் அனுப்பப்படும். புதுவையில் சிமெண்ட் தொழிற்சாலை கிடையாது. எனவே விநியோகஸ்தர்களை அழைத்து பேசி சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அன்னை சோனியா பெயரில்மானிய விலையில் சிமெண்ட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து