தி.மலை மாவட்டத்தில் 1723 ஊராட்சிகளில் இல்லந்தோறும் சேவை துவக்கம்: அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் ரமேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo07

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1723 கிராம ஊராட்சிகளில் இல்லந்தோறும் இணையம் சேவை துவக்கம் செய்யப்படவுள்ளதாக தி.மலை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தனி தாசில்தார் பி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

இணையம் சேவை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் இல்லந்தோறும் இணையம் சேவை துவக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் முதற்கட்ட ஆய்வு பணி முதற்கட்ட ஆய்வு பணி நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியத்துக்கும் தனி தாசில்தார் சிறப்பு முகாம் நடத்தி 18 வட்டார பயிற்றுநர்களை தேர்வு செய்தும் கணக்கெடுப்பு பணிக்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு நபர் வீதம் 1723 தொழில்நுட்ப பணியாளர்களை தேர்வு செய்தும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 67 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தி.மலை மாவட்ட தனி தாசில்தார் பி.ரமேஷ் பயிற்சி முகாமினை துவக்கிவைக்க, தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கேபிள் டிவி டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பூவரசன் பயிற்சி வழங்கினார். இதுகுறித்து தனி தாசில்தார் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் வசிக்கும் துடிப்பான படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

 

இதில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் வருகிற 19, 20 ஆகிய 2 தினங்கள் முதற்கட்ட கணக்கெடுப்பு (சர்வே) செய்யப்பட்டு அறிக்கையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்படவுள்ளது என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து