முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

  திருப்பரங்குன்றம், - திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள  அருள்மிகுகாசிவிஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் சுப்பிரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேகவிழா ரூ.20 லட்சத்தில் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 திருப்பரங்குன்றம் மலைமேல் காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அங்கு முருகன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றுவருகின்றனர். மேலும் இங்கு புன்னிய நதி கங்கைக்கு நிகரான புனித தீர்த்தமும் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒருமுறை வேல்வாங்குதல் திருவிழா நடைபெறும்.  கிராம திருவிழாவான இத்திருவிழாவின்போது மூலவர் முருகனின் திருக்கரத்தில் உள்ள வேலை காசிவில்வநாதர் ஆலயத்தில் உள்ள புனித தீர்த்தில் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.
 இக்கோவிலில் கடந்த 2005 ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்று. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து கோவில் துணை ஆணையர் செல்லதுரை தெரிவித்ததாவது:
 மலைமேல் உல்ள காசிவிஸ்வநாதர் கோவிலை ரூ.20 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சரவணப்பொய்கை பகுதியில் உள்ள புதுபடிக்கட்டு அருகே அமைந்துள்ள விநாயகர் கோவில், 8 படிக்கட்டு மண்டபங்கள் மற்றும் அதில் உள்ள வேலைப்பாடு நி¬றுந்துள்ள சிலைகள் உள்ளிட்டவைகளை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கு உபயதாரர்கள் வரவேற்க படுகின்றனர். கோவில் அலுவலகம், உள்துறை அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்கள் 0452- 2482248, 0452- 2482249 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து