தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் குதறியதில் பரிதாப சாவு

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      ஈரோடு

பவானிசாகர் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், நாய்கள் குதறியதில் இறந்தது. பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து, நேற்று காலை, தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், சந்தையபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தோட்டத்தில் புகுந்தது. இதைப் பார்த்த தெருநாய்கள், மானை விரட்டி, விரட்டி கடித்தன. இதில், புள்ளிமான் படுகாயம் அடைந்தது. வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தரப்பட்டது. வனத்துறை ஊழியர்கள், மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தது. நாய்களிடம் கடிபட்டு இறந்த மான், நான்கு வயது ஆண் புள்ளி மான் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து