முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்;ப்பது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      தேனி
Image Unavailable

   தேனி -இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்; செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்தல், பிழைகளை களைதல், இரட்டைப்பதிவுடைய வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் தெளிவற்ற புகைப்படம் உள்ள வாக்காளர்களிடம் புதிய வண்ணப்புகைப்படம் பெற்று, பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.  
2.தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில்  சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு இவ்வாண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   இந்தச் சிறப்புப் பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 சிறப்புப்பணியின் போது மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள்:
இந்த சிறப்புப்பணி 01.07.2017 முதல் 31.07.2017 வரை நடைபெறவுள்ளது. 
வாக்குச்சாவடி வாரியாக 2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஃ வாக்காளர் புள்ளி விபரங்களை பரிசீலனை செய்து 18-19 வயதுடையவர்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளவர்களுக்கும், தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் புள்ளி விபரத்திற்கும் இடையேயான வித்தியாசத்தின் அடிப்படையில், இளம் வாக்காளர்களை சேர்க்கும் இப்பணி நடைபெறவுள்ளது.  
படிவங்கள் பெறப்படும் வழிகள்: 
1. அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள் ஃ உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும்  பெறப்படும்.
2. 2. www.elections.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாகவும்
3. தபால் வழியாகவும்
4. இ-சேவை மையங்கள் வாயிலாகவும் பெறப்படும்.

சிறப்பு முகாம்கள்:
           தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.  மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போதுமான படிவங்கள் மற்றும் 05.01.2017 அன்;று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் (துணைப்பட்டியலுடன்) பணியிலிருப்பார். பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலினை சரிபார்த்து, தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.  வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட இளைய வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6 ஐ  பெற்றுக் கொள்ளவார். மேலும், இச்சிறப்பு முகாம்களில் பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும் பெறப்படும்.  எனவே, இச்சிறப்பு முகாம் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
                 இந்த சிறப்பு முகாம்கள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் (பொறியியல்   கலை மற்றும் அறிவியல்   தொழில்துறை பயிற்சி மையங்கள்  பாலிடெக்னிக் கல்லூரிகள்   செவிலியர் பயிற்சி கல்லூரிகள்) 01.07.2017 முதல் 31.07.2017-க்குள் ஏதேனும் இருநாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விடுபட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.  தேனி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 61 மாணவர்கள் (ஊயஅpரள யுஅடியளளயனழசள) வளாக தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக உரிய பயிற்சி வழங்கப்படும்.  இவ்வளாக தூதுவர்கள் (ஊயஅpரள யுஅடியளளயனழசள) அவர்கள் பயிலும் கல்லூரிகளில் விடுபட்ட இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வர்.
இறந்த வாக்காளர்களை நீக்குதல்: 
இச்சிறப்பு திட்டத்தின்  மற்றுமொரு நடவடிக்கையாக இறந்தவாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது.  இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களிலிருந்து  நீக்கப்படவுள்ளது.  மேலும், பெயர் சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர் நீக்குதல் தவிர பெறப்படும் ஏனைய படிவம் - 7, 8, 8யு படிவங்கள் சிறப்புத்திட்டம் நிறைவடைந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசியல் பிரமுகர் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம்:
      மாவட்ட அளவில் தேனி மாவட்டத்தில் இந்த சிறப்புத் திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் 20.06.2017 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படவுள்ளது.  இக்கூட்டத்தின்போது விடுபட்ட இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்தும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்தும், அரசியல் கட்சியினருடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.ஞானசேகரன் அவர்கள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஆனந்தி அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள், வட்டாட்சியர் (தேர்தல்) திருமதி.சத்தியபாமா அவர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும்  பத்திரிக்கையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து