யானை தாக்கி விவசாயி சாவு

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      ஈரோடு

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதி ஒன்னகரை பகுதியைச் சேர்ந்தவர் மதனன் (55), விவசாயி. இவர், ஜல்லிபாளையம் எனும் பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த காட்டு யானை மதனனைத் தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த மதனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து