Idhayam Matrimony

உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி கலெக்டர் சி.கதிரவன் இரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இரத்ததான முகாம் 

இந்த முகாமில் அரசு தலைமை மருத்துவமனையில் 2016-ம் ஆண்டில் 3 மூறை தொடர்ந்து இரத்ததானம் செய்த ஆண்கள், 42 நபர்களுக்கும் மற்றும் 2-முறைஇரத்த தானம் செய்து 6 பெண்கள் உட்பட 48 நபர்களுக்கும் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு சான்றுகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இதில் காவல்துறைப் பணியாளர்கள், சீரடை பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் 50-ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு இரத்த கொடை வழங்கினார்கள்.

கலெக்டர் சி.கதிரவன் பேசும்பொழுது.

ஆண்டுதோறும் ஜுன்-14 அன்று உலக இரத்த கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மற்றும் இணை இயக்குநர் சுகாதார பணிகள் இணைந்து இந்த தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மருந்துக்கு மாற்று மருந்து கொடுப்பது போல, இரத்தத்திற்கு இரத்தம்தான் வழங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இரத்தம் கொடையாக வழங்கும் பொழுது விபத்துகளில் ஏற்படும் உயிரை காப்பாற்றவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், குருதி தேவைப்படுகிறது. இதற்காக இரத்தம் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 94 முகாம்கள் நடப்பாண்டில் நடத்தப்பட்டுள்ளது. 11,135 யூனிட் குருதி கொடையாக வரபெற்றுள்ளது. மாவட்டத்தில் விபத்துகளில் உயிரை காப்பாற்றும் வகையில் அறுவை சிகிச்சை, மற்றும் இன்ற பிற தேவைகளுக்காக மனித உயிர்களை காப்பாறும் வகையில் இன்னும் பெரும்பாலோர்கள் முன்வரவேண்டும். துறை ரீதியாக அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து காவேரிப்பட்டிணம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்ற இரத்த தான முகாமினை பார்வையிட்டு, விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் தொடக்கி வைத்தார். இப்பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது நலபணிகள் இணை இயக்குநர் மரு.அசோக்குமார், சுகாதர பணிகள் துணை இயக்குநர் மரு.பிரியாராஜ், உள்ளிருப்பு மருத்துவர் மரு.பரமசிவம், காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கந்தசாமி, ரெட்கிராஸ் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஹரிராம், ரெட்கிராஸ் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து