முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் சிவஞானம். தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பாப்பணம் கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர்  அ.சிவஞானம்   தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய்த்துறையின் மூலமாக 50 பயனாளிகளுக்கு ண உதவித் தொகையினையும், 47 பயனாளிகளுக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையினையும், 4 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையினையும், 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 1 பயனாளிக்கு சிறுகுறு விவசாயி சான்றிதழும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக ஜந்து வயது நிறைவடைந்து தொடக்கக்கல்வி பயிலச் செல்லும் 5 அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலமாக 12 பயனாளிகளுக்கு ரூ.54,548 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், ஊரக வளர்ச்சித்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் முழுமானியத்துடன் 2 பயனாளிகளுக்கு ரூ.56,092 மதிப்பிலான மழைத்தூவான் கருவிகளும் என மொத்தம் ரூ.22,78,640 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பேசும் போது   தெரிவித்ததாவது :-
மக்களை தேடி அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருவதற்கு காரணம், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில்  பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமினை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிராமங்களில் முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
மேலும், இம்முகாம்களில் வருவாய்த்துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்;துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற பிற அரசுத்துறைகள் மூலமும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, கிராமத்தில் உள்ள இ-பொது சேவை  மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில்  உள்ள பொது இ-சேவை  மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட மனுக்கள் பதிவு செய்யும் பிரிவிலும் தங்கள் மனுக்கள் தகுதியானதா என தெளிவாக தெரிந்து கொண்ட பின் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஏரி,கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகளுக்கு வண்டல்மண்ஃசவுடுமண்; போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆகையால் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி  கொண்டு தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், இவ்வாறு ஏரி,கண்மாய் மற்றும் குளங்கள் தூர்;வாருவதன் மூலமாக பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை அதிகப்படியாக சேமிக்க முடியும் என்றும், மேலும் சேமிக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்கிறது என்றும் தெரிவித்தார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்கள்.
மேலும், மக்கள் தொடர்பு திட்ட முகாமில் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின்; அதிநவீன மின்னணு வாகனம் மூலம் அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டது.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.திலகவதி, தனித்துணை ஆட்சியர் (சா.ப.தி) முருகேசன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) தி.உஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தி.விஜயாம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நரசிம்மன், காரியாபட்டி வட்டாட்சியர் தி.மாரிசெல்வி, உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து