முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      தேனி
Image Unavailable

      தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தலைமையில்  நடைபெற்றது.
     முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.12,81,000 - மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களையும், பல்வேறு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ.3,12,000 - மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32,258 - மதிப்பிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.20,000 - மதிப்பிலான வீரிய தக்காளி நாற்றுக்களையும், வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.9,828 - மா நெருக்கு ஒட்டு கன்றுகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386 - வீதம் ரூ.3,772 - மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.16,61,858 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்த்திட்டத்தின் சார்பில் அங்கன்வாடிகளில் பயின்ற 12 குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களையும், 21 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு இரண்டு பெண் குழந்தைகள் சான்றிதழினையும், 7 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பயன்களை வழங்கி தெரிவிக்கையில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பயன்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் இருக்குமிடங்களுக்கே தேடிச் சென்று நடத்தப்படும் முகாமே இந்த மக்கள் தொடர்பு முகாம். ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை போன்று  தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.     சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஒரு கிராமத்திற்கு தேவையான தனிநபர் கழிப்பிட வசதி, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பொது கழிப்பிட வசதிகள் செய்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இடவசதி இருந்தால் கழிப்பறை வசதியினை ஏற்படுத்திடவும் ரூ.12,000 - அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

சுற்றுப்புற சூழ்நிலைகளை பராமரிப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுத்திட முடியும். மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மரக்கன்று பண்ணைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் அனைத்து கிராமப்புறங்களிலுள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் மரக்கன்று நடவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதினை தவிர்த்திட வேண்டும்..தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சி அளித்து வங்கிக்கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடனுதவியும் அளித்து வருகிறது. புதிய தொழில் புரிய விருப்பமுள்ளவர்கள் சந்தையில் பொருளுக்கான தேவை என்ன, பொருளின் முக்கியத்துவம் அறிந்து அதன் விற்பனை இடங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து குறைந்த செலவில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கணக்கிட்டு தொழில் தொடங்கிட வேண்டும். தமிழக அரசு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது.
     மனிதன் வாழ்வதற்கு தேவையான உணவு உற்பத்தியினை பெருக்கிட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத அரசு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அரசு மானியமும் வழங்கி வருகிறது. தமிழக அரசு பல்வேறு சான்றிதழ்கள் இ.சேவை மையங்கள் மூலம் வழங்கிட உத்தரவிடப்பட்டு, பொதுமக்கள் தேவையான இருப்பிட, வருமான், ஜாதி, போன்ற பல்வே சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
    
இம்முகாமில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  மூர்த்தி   கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  முத்துகுமாரசாமி   மகளிர் திட்ட அலுவலர்  கல்யாண சுந்தரம்   பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  தி.இரா.ஆனந்தி   தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  கிஷோர்குமார்   உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்   உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன்   உதவி இயக்குநர் (கனிமம்)  சாம்பசிவம்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர் ச்சித்திட்ட அலுவலர்   ராஜராஜேஸ்வரி    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்   ஜெயசீலி   மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  தி.கிருஷ்ணவேனி   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரகுபதி   மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  ராமசுப்பிரமணியன்   மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  சீனிவாசக்கண்ணன்   வட்டாட்சியர்கள்  தி.ராணி    தி.நஜிமுனிசா அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து