முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தினம் ரத்ததான முகாமினை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-  அறுவை சிகிச்சை, விபத்து போன்ற அவசர காலங்களில் பொதுமக்களுக்கு குருதியின் தேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ரத்ததானத்தின் அவசியத்தினை வலியுறுத்திடும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தினை அந்தந்த பிரிவு வாரியாக இரத்தம் பெற்று பயனடையும் வகையில் அவ்வப்போது அரசுத்துறைகளின் மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாகவும் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடத்தப்படுகின்றது. 
                ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்த ரத்த வங்கியின் மூலம் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2016 வரை 74 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 3,752 யூனிட் ரத்த பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்டத்தில் உச்சிப்புளி, ஆர்.எஸ்.மங்களம், தேவிப்பட்டிணம், பரமக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, பெரியபட்டிணம், நயினார்கோயில் ஆகிய 9 இடங்களில் இரத்தம் சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான நபர்கள் ஆண்டொன்றுக்கு பெண்கள் 3 முறையும், ஆண்கள்; 4 முறை ரத்தம் கொடுக்கலாம்.  எனவே அவசர காலங்களில் பொதுமக்களின் ரத்த தேவையினை பூர்த்தி செய்து விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட உறுதுணை புரிந்திடும் வகையில் தன்னார்வமாக ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.
 இந்நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் நலம் காத்தல் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னார்வமாக ரத்ததானம் செய்த குருதி கொடையாளர்களைப் பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.மீனாட்சி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் ஏ.முருகேசன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க துணை சேர்மன் ஹாரூன்,  செயலாளர் ராக்லாண்ட் மதுரம், மாவட்ட ரத்த தான முகாம் அமைப்பாளர் எஸ்.ஐயப்பன்;  உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.....................................

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து