முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசமாய் வளர்த்த தம்பி மகனால் அனாதையாய் விடப்பட்ட மூதாட்டி

புதன்கிழமை, 14 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி ஜுன் 15 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்னத்தாய் என்ற பாவக்காய். இவரை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு  ணம் செய்து வைக்கப்பட்டது.  ணமாகி ஓராண்டில் சின்னத்தாயை தனியே விட்டுவிட்டு சென்றுவிட்டார் இவருடைய கணவர் ராமதாஸ். மறுமணம் செய்து கொள்ளாத சின்னத்தாய் கடந்த 1986 முதல்   அரசு வழங்கும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகையான ரூபாய் 35 முதல் தற்போது அரசு வழங்கும் 1000 ரூபாய் வரை பெற்று வருகிறார். மேலும் தமிழக அரசு இவருக்கு 3 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கியுள்ளது. இவருடைய தந்தை பெயரில் இருந்த 11 வீடுகள் இருந்துள்ளதில் இவருக்கும் பங்கு கிடைத்துள்ளது. தனிமையில் இருந்த சின்னத்தாயை பார்க்க   அதே ஊரில் குடியிருந்து வந்த இவருடைய உடன்பிறந்த  தம்பி ராஜுவின் மகன் பழனிச்சாமி அடிக்கடி வந்து பாசமாய் பேசியுள்ளார். இதனால் பழனிச்சாமியை தனது பிள்ளையை போல் பார்த்து வந்த சின்னத்தாய்  தனது வீட்டின் முழு பொறுப்பையும் இவரிடம் வழங்கியுள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்ட பழனிச்சாமி சின்னத்தாயின் மாதாந்திர அரசின் உதவித் தொகை, கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் பெற்று தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். நாளடைவில் சின்னத்தாய் வயதாகி கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே, அக்கம் பக்கத்தில் சிறு சிறு வேலைகளை செய்தும், கோவில்களை சுத்தம் செய்தும் சம்பாதித்து தனது தம்பி மகன் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார்;. நாளடைவில் உடல்நிலை மிகவும் மோசமடையவே பிச்சை எடுக்க துவங்கியுள்ளார். அதில் வரும் பணத்தையும் தன்னை பார்த்துக் கொள்வான் என்று நம்பி பழனிச்சாமியிடம் கொடுத்துள்;ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொற்று ஏற்படவே சின்னத்தாயால் பிச்சை எடுக்க கூட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பழனிச்சாமி  தன் குடும்பத்துடன் ஊரை காலி செய்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். அரசின் மாதாந்திர உதவித் தொகை வரும் நாளில் நேரடியாக வந்து சின்னத்தாயை மிரட்டி பணத்தை  பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் புண்ணாகி அழுகிய நிலையில் இருந்ததால் உத்தமபாளையத்தில் உள்ள பழனிச்சாமிக்கு ஊர் மக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பழனிச்சாமி முரண்பாடாக பேசி தட்டி கழித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக புண்களால் உடல் முழுவதும் அழுகி தூர்நாற்றம் வீசும் நிலையில் புதிதாக கட்டி திறக்கப்படாத ரேசன் கடையில் தங்கியுள்ளார். பாசமாய் வளர்;த்த தம்பி மகனே பணம் முழுவதையும் பிடிங்கி கொண்டு அனாதையாய் விடப்பட்ட மூதாட்டியை பார்த்து அப்பகுதி மக்களே அதிர்ச்சியில் உறைந்து போயிள்ளனர். இவருடைய நிலையை  தெரிந்து சின்னத்தாயின் அக்காள்  பேத்தி காமாட்சிபுரத்தை சேர்ந்த  வேலுச்சாமி மனைவி வீரகாமு தற்போது தன்னுடைய குடும்ப ஏழ்மை நிலையிலும் கூட இவருக்கு தன்னால் முடிந்தளவு பணிவிடைகள் செய்தும் உணவளித்தும் பார்த்து வருகிறார். தூர்நாற்றம் வீசவே ஊர்மக்கள் வீரகாமுவிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனால் குடும்ப வறுமை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பராமரிக்கும் நிலையில் கூட முடியாத நிலையில் உள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சின்னத்தாயை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 60 வயதிற்கு மேலான அனுபவ பொக்கிஷங்களை பாதுகாக்காமல்,  அனாதையாக விடுபவர்கள் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து