முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக தேர்வாகிறார் சுஷ்மா சுவராஜ்?

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? என்பதில் பா.ஜனதா கூட்டணியில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலை பெற்று உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

வேட்பு மனு தாக்கல்

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது. 14–வது ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் கமி‌ஷன் சார்பாக பாராளுமன்ற தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கின.

வேட்பாளர் தேர்வில் மும்முரம்

ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 17–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜூலை 20–ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஏற்ககூடிய பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

காங்.குடன் சந்திப்பு

இதில் ஒருமனதாக முடிவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை நிறுத்தும். பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை கடந்த 12ம் தேதி அமைத்தார். இந்த குழு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தும். இக்குழுவானது இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளும் குழுவை தொடங்கியது, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளுடன் மூவர் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் வருகிற 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் எனவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போதுவது யார் என்பது பற்றி தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ரகசியம் காத்து வருகின்றன. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுபற்றிய தெளிவான நிலை தோன்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுஷ்மா சுவராஜ்

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? என்பதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலை பெற்று உள்ளார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

 ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜனதா வகுத்து உள்ள அனைத்து தகுதிகளிலும் முதன்மையிடம் பிடித்து இருப்பவர் சுஷ்மா சுவராஜ். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சித்தராம் யச்சூரியை சந்திக்கும் போது பா.ஜனதா குழுவில் இடம்பெற்று உள்ள தலைவர்கள் சுஷ்மா பெயரை அறிவிப்பது தொடர்பாக பேசுவார்கள் எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. சுஷ்மா சுவராஜ் ஒரு வெற்றி வேட்பாளராக இருக்கிறார் என்பதே அனைத்து தரப்பு கருத்தாக உள்ளது. சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பிராந்திய கட்சிகளிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுநிலையான வேட்பாளர்

மம்தா பானர்ஜி மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் சுஷ்மா சுவராஜை எதிர்ப்பதை கடினமானதாக கொள்வார்கள் என உயர்மட்ட தலைவர் கூறிஉள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது. இருப்பினும் வேட்பாளர் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற அரசியல் கட்சிகளாலும் சுஷ்மா சுவராஜ் நடுநிலையான வேட்பாளராக பார்க்கப்படுவார் எனவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து