முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் 562 இடங்களில் வண்டல் மண், களி மண், கிரவல் மண் 3 லட்சத்து 90 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன் தகவல்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை மற்றும் பாளையம்புதூர் ஆகிய ஏரிகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணியை கலெக்டர் கே.விவேகானந்தன், நேற்று (15.06.2017) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

 

விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :-

தமிழக முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவை தூர்வாரப்பட்ட வண்டலமண், களிமண், சவுடுமண், கிரவல் மண் போன்றவற்றை விவசாயிகளின் விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்கும், மண் பாண்ட தொழில்களுக்கும் மற்றும் பொது நோக்கத்திற்கும் வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தும்பலஅள்ளி அணை, தொப்பையாறு அணை, கேசரிகுளிஅல்லா அணை, நாகாவதி அணை, வாணியாறு அணை உள்ளிட்ட 5 அணைகள் மற்றும் 69 ஏரிகளிலும் என பொதுப்பணித்துறை மூலம் 74 இடங்களிலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 488 குளங்களிலும் என மொத்தம் 562 இடங்களில் தற்போது வரை 301 இடங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அணையின் நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையிலும் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல்மண் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண் நஞ்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் (25 டிராக்டர்), புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் (30 டிராக்டர்) எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வண்டல் மண், களி மண், கிரவல் மண் இதுவரை 6803 விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்களுக்கு 3 இலட்சத்து 90 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு வண்டல்மண் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.

முன்னதாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை இயலாதவர்களுக்கு தலா ரூ. 1000ஃ- வீதம் 15 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் ஆணை 16 பயனாளிகளுக்கும், மின்னணு குடும்ப அட்டை 25 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ ராகி விதை ஆகியவற்றை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் ராஜசேகரன், உதவி இயக்குநர் வேளாண்மை அமுதவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்தி, அமரவேல், துணை வட்டாட்சியர்கள் கோவிந்தராஜன், இராஜராஜன் உட்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

A

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து