தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 -ஏ விற்கான பயிற்சி: கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
3

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்புதுறை சார்பாக நடத்தப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப்-ஏவிற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் அவர்கள் வரவேற்றார்.

பயிற்சி வகுப்பு


 

பின்பு கலெக்டர் சி.கதிரவன் பேசும் பொழுது. போட்டிகள் நிறைந்த உலகில் நாம் குறிக்கோலோடு படிக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் பொழுது தேர்வினை எழுத வேண்டும். அதுமட்டுமல்லாமல் தன்னம்கிகை இருக்க வேண்டும். நம்பிக்கையோடு செயல்பட்டால் நீங்கல் சமுதாயத்தில் ஒரு உரிய நம்மதிப்பு உருவாகும், ஒரு வேலைவாய்ப்பு பெற கூடிய நிலை ஏற்படும். தற்பொழுது குரூப்-ஏ பணிக்கான -1953 இடங்களுக்கு பூர்த்தி செய்ய இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

குருப்-2 தேர்வானது 6.8.2017 அன்று நடைபெறுகிறது. இந்த இலவச பயிற்சியானது 14.06.2017 முதல் 27.07.2017 பயிற்சி வகுப்பு நடைபெறும். இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பை பெற்று சமுதாயத்தில் உயர்ந்தவராக உருவாக வேண்டும் என கலெக்டர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து