காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.110 கோடியில் திட்டப் பணிகள்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      சென்னை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு ரூ.110 கோடியில் செலவிடப்பட்ட திட்டப்பணிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மீன் விற்பனை

தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன்விற்பனை கூடத்தில் மீன்விற்பனை செய்யவேண்டும் என்று அரசு தரப்பும் அதற்கு மறுப்பு தெரிவித்து மீன்விற்பனையாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1984ம் ஆண்டு முதல் மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 23 மீனவ கிராமங்களில் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மீன்வியாபாரிகள் வாழ்வாதாரமாக உள்ளது.

இங்கு 200க்கும் மேற்ப்பட்ட கட்டுமரங்கள், 1200 விசைப்படகுகள், 2000க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. தினமும் ஆயிரம் டன் மீன்வகைகள் கொண்டுவரப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் நடக்கிறது. இங்குள்ள மீனவர்களுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.110 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து தந்துள்ளார். இந்த இடத்தில் பல வசதிகள் இல்லை என கூறி நவீன மீன்விற்பனை கூடத்தில் மீன் விற்காமல் பழைய இடத்திலேயே மீன்கள் விற்கப்பட்டு வருகிறது.

புதிய இடத்தில் நேற்று முதல் மீன் விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு நிலையிலும், மீனவமக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் மீனவ கிராமமக்கள் சார்பில் வழக்குத்தொடுத்த நிலையில் பழைய மீன் விற்பனை கூடத்தை பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மீன்வள வாரிய ஆணையர் போலிஸ் துணைகமிஷனர் ஆகியோர் இரண்டு தரப்பினரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் இ.சேகர் ஐஸ்மீன் சங்கத்தலைவர் கே.செல்லக்கண்ணு, கௌரவத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர் செல்வம், பொருளாளர் சுரேஷ், இணைசெயலாளர் டி.நந்தா, கடல்உணவு சங்கத்தலைவர் கே.குணா உட்பட பலர் அதிகாரிகளை சந்தித்து மீனவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து மீன்விற்பனை கூடத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து