முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருநெல்வேலி

குற்றாலத்தில் போலீஸ் உடையில் வலம் வந்து சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த போலீசார் செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி கிளை சிறையில் அடைத்தனர்

ரகசிய தகவல்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் குற்றாலத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுடைய வாகனங்களை சோதனை நடத்தி போலீசார் பணம் பறிப்பதாக புகார்கள் வந்தன. மேலும் அந்த பகுதியில் குறைந்த வயது உடைய ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பல வாகனங்களை மறித்து சோதனை நடத்தி பணம் பறிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாகன சோதனை

இந்த நிலையில் குற்றாலம் போலீசார்  செவ்வாயன்று  குற்றாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

கைது

விசாரணையில் அவர் குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் செல்வகுமார் (வயது 27) என்று தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரை படித்து உள்ள அவர் அந்த பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் உடையில் பல நாட்களாக சுற்றித்திரிந்து வாகனங்களை சோதனை செய்து பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி கிளை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து