முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்தினாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் வழியே பதிவு செய்யும் பயிற்சி: கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வொர்த் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் வழியே பதிவு செய்யும் பயிற்சி வகுப்பினை நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்.

பயிற்சி வகுப்பு

 

பின்னர் இதில் கலந்து கொண்ட மகளிர் திட்ட வட்டார கள பணியாளர்கள், இ-சேவை மைய கணினி பணியாளர்கள், புதுவாழ்வு திட்டத்தின் களப்பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களிடையே கலெக்டர் சி.அ.ராமன், பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மத்திய அரசால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இதற்கென உள்ள படிவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், தபால் வில்லை அளவு புகைப்படம் ஒன்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரத்த பிரிவு, சாதி சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளியின் கையொப்பம் (அ) இடது கை பெருவிரல் ரேகை ஆகியவற்றை படிவத்துடன் இணைத்து இணைய சேவை மையத்தில் பதிவு செய்திட வேண்டும்

இத்திட்டம் சம்மந்தமாக ஏற்கனவே 26.04.2017 அன்று மத்திய அரசின் பயிற்சி பெற்ற அலுவலர்களால் ஒரு நாள் பயிற்சி சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் மூலம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 2787 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு மிகவும் குறைவாக உள்ள காரணத்தால், தற்போது மாவட்டத்திலுள்ள பிற துறைகளுடன் இணைந்து (புதுவாழ்வு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மகளிர் திட்டங்களில் உள்ள இ-சேவை மையங்களிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள தன்னாhர்வ தொண்டு நிறுவனங்கள்) தங்கள் பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வலைதள முகவரியில் பதிவு செய்திட ஏதுவாக இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் அனைத்து அலுவலர்கள் மற்றம் தொண்டு நிறுவன பணியாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் \100 சதவீதம் பதிவு செய்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என்று கலெக்டர் சி.அ.ராமன், பேசினார்.

இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மகளிர் திட்ட உதவி அலுவலர் விஜயகுமாரி, வொர்த் ட்ரஸ்ட் நிறுவன தலைவர் கீதா கணபதி மற்றும் பயிற்சி பெறும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து