பொன்னேரி அருகே சட்டவிரோதமாக ஏரியில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருவள்ளூர்
Ponneri 2017 06 15

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காகவும் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மண் குவாரி

இந்த நிலையில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக ஏரி வறண்டு காணப்படுவதால் அங்கு மண் குவாரிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஏரியில் விதிமுறைகளுக்கு மாறாக ஜெ.சி.பி இயந்திரங்கள் மூலம் 30 முதல் 40 அடி வரை குழி தோண்டி மண் அள்ளி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கும் என்பதால் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரட்சனையை பேசி தீர்க்காமல் மண் அள்ளியதால் அப்பகுதி மக்கள் மண் குவாரியை முற்றுகையிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து