அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணிகள் : ஆந்திர பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      அரியலூர்
Ariyalur 2017 06 15

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை ஆந்திர பிரதேச மாநிலத்தில் செயல்படுத்திட அம்மாநில துணை ஆணையர் சுனிதா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர்.

ஆந்திர குழு

இதனைத்தொடர்ந்து, திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் ஊராட்சியில் சுமார் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களைக் கொண்டு மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகளை பார்வையிட்டும், இக்குழுவைச்சார்ந்த உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நற்றனர். இத்திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டனர். மேலும், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள தேக்கு மரக்கன்று வளர்ப்பு மற்றும் குடில் அமைத்து பலவகையான மரக்கன்றுகள் வளர்க்கும் செயல்முறைகளை பார்வையிட்டு, இப்பணிக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் ஊதிய முறைகளையும் கேட்டறிந்தனர். வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகள் மூலம் நடைபெறும் வீடுகட்டும் திட்டத்திற்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறதையும் அறிந்தனர். சுள்ளங்குடி ஊராட்சியில் லதா க-பெ.தங்கதுரை, மங்கையர்கரசி க-பெ.முத்தையன் ஆகியருடைய சொந்த நிலங்களில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டைகளை பார்வையிட்டதோடு, அப்பண்ணைக்குட்டையில் மீன்வளர்க்கும் முறைகளையும் அப்பயனாளிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகடம்பூர் ஊராட்சியைச் சார்ந்த இராமமூர்த்தி த-பெ.சுப்பிரமணியன் என்பவருடைய வயலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்களை கொண்டு விவாசய பயன்பாட்டிற்கு புதியதாக கிணறு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, இதில் பயனாளிகளின் பங்கு மற்றும் இப்பணிக்கு தேவைப்படும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை அளவீட்டு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்து, இப்பணி எவ்வகையில் செயல்படுத்த முடியும் என்பதை இங்குள்ள வளர்ச்;சித்துறை அலுவலர்களிம் கேட்டறிந்து குறிப்பு எடுத்துக்கொண்டனர். இப்பணியினை சிறப்பாக செயல்படுத்திய இம்மாவட்ட அலுவலர்களை வெகுவாக பாராட்டியதுடன் இதுபோன்று எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளுவோம் என இப்பணி மேற்பார்வையின் போது ஆந்திர பிரதேச மாநில குழுவினர் தெரிவித்தனர்.

இப்பணி மேற்பார்வையில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திட்டம் லோகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் (சாலை, பாலங்கள்) முகமது நிஜாமுதின், உதவி திட்ட அலுவலர் வர்கீஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) லதா, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.அகிலா, ஜெயராஜ், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாபிகேசன், சண்முகசுந்தரம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், இராஜேந்திரன் மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து