ஆணைக்குப்பம் ஊராட்சியில் ஊத்தாங்குளத்திலிருந்து வண்டல் மண் தூர்வாரப்படும் பணி : கலெக்டர் இல.நிர்மல்ராஜ் ஆய்வு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருவாரூர்
Thiruvarur 2017 06 15

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஆணைக்குப்பம் ஊராட்சியில் ஊத்தாங்குளத்திலிருந்து வண்டல் மண் தூர்வாரப்படுவதை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நன்னிலம் வட்டம ஆணைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தாங்குளத்திலிருந்து வண்டல் மண் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்டு , வண்டல் மண் தூர்வாரப்பட்டுள்ள அளவீடுகள் குறித்தும்,பயன்பெற்றுள்ள விவசாயிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர்; மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுத்து விவசாயிகள் விளைநிலங்களை மேம்படுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். விளை நிலங்களை மேம்படுத்தும் பொருட்டு குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுத்து உபயோகித்திட அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும் வண்டல் மண்ணை விளைநிலங்களுக்கு பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மேம்படுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இவ்வாய்வில் உதவி இயக்குநா (ஊராட்சிகள்) ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து