ஈரோடு மாவட்டம் அனைத்து அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை விரைந்து கணினிமயமாக்க பணிப்பதிவேட்டினை சமர்பிக்கவேண்டும். மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், தகவல்.

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      ஈரோடு

 

ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மேலாண்மை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குதல் தொடர்பான சிறப்புக்கூட்டம் விப்ரோ குழுவினரால் இவ்வலகிலுள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கணினி மயமாக்குதல் தொடர்பான பணி

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களின் பணிப்பதிவேட்டினை கணினி மயமாக்குதல் தொடர்பான பணி விப்ரோ நிறுவனம் மூலம் கடந்த நவம்பர்-2016 முதல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏற்கனவே அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் 12.11.2016 அன்று நடைபெற்றது. அதன் தொடர்சியாக பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குதல் பணியின் இறுதி கட்ட நடவடிக்கை குறித்த விபரத்தினை தெரிவிக்கும் வகையில் இச்சிறப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 95 சதவீதம் பணிப்பதிவேடுகள்

 பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணியில் 99 சதவீத பணிப்பதிவேடுகள் எழுதும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் 95 சதவீதம் பணிப்பதிவேடுகள் சரிபார்க்கும் பணிக்கென பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 சதவீத பணிப்பதிவேடுகள் மட்டுமே சரிபார்க்கும்பணி முடிந்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடமிருந்து பணிப்பதிவேடு விப்ரோ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணி 30.06.2017-க்குள் நிறைவு செய்யவேண்டிய நிலையிலுள்ளதால் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் விரைந்து பணிப்பதிவேடுகளை சரிபார்த்து விப்ரோ குழுவினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 

பணிப்பதிவேடுகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டால், ஓய்வூதியப்பலன்கள் பெறுவது எளிதாவது மட்டுமின்றி, பணியிடமாறுதல், பதவி உயர்வு, பணிவரன்முறை, தகுதிகாண்பருவம் போன்ற நிகழ்வுகளில் துரிதமாக சம்பந்தப்பட்ட பணியாளர்களின் விபரங்களைப் பெறவும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தகவல்களை இணைத்தின் வழியே அனுப்புவது மட்டுமின்றி, உரிய நடவடிக்கைகளும் எவ்வித காலதாமதமின்றி எடுக்கவும் முடியும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 இக்கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை, கோவை மண்டல இணை இயக்குநர் தே.செல்வசேகர், ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் ஆர்.நர்மதாதேவி, கருவூல அலுவலர் .புஷ்பா, கூடுதல் கருவூல அலுவலர் மற்றும் கருவூல கணக்குத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து