முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் 9,384 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      கடலூர்

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் 5 வயது நிறைவு பெற்ற 9,384 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  வழங்கினார்.சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் அவர்களால் 10.09.2015 அன்று முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ் வழங்குதல் குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரசாணை எண்.77, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்(ளுறு7-1)துறை, நாள்.25.10.2016 அன்று வெளியிடப்பட்டது.      மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தில் முன்பருவக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டடுள்ளது.இதன்படி அங்கன்வாடி மையங்கள் துடிப்பு மிக்க முன்பருவ கல்வி மற்றும் வளர்ச்சி மையங்களாக செயல்படுகின்றன. நீண்ட காலமாக பெற்றோர்கள் முன்பருவக்கல்வறைவு சான்றிதழ் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

 9,384 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள்

ச்சான்றிதழ் வழங்குவதன் மூலம் குழந்தைகளை கண்காணித்தல், தேசிய முன்பருவக் கல்விக் கொள்கை 2013 மற்றும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் போன்றவைகளை சிறப்பாக செயல்படுத்திடவும், அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையினை அதிகரித்து, இடைநிற்றலை குறைக்கவும் உதவும். மேலும் இச்சான்றிதழ் வழங்குவதால் அங்கன்வாடிப் பணியாளர்களை ஊக்குவிக்கவும், மக்களிடையே இத்திட்டத்தின் தேவைகளை பயன்படுத்திட ஆர்வத்தினை ஏற்படுத்த ஏதுவாகும்.கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மையங்களில் மதிய உணவுடன் முன்பருவக்கல்வி பயிலும் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 42,690 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அக்குழந்தைகளில் 5 வயது நிறைவு பெற்ற 9,384 குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  அவர்களால் வழங்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) கோ.அன்பழகி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் செல்வி, மோனிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து