முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசுத் தலைவர் தேர்தல்: டெல்லியில் சோனியாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் சந்தித்தனர்.

 தற்போது ஜனாதிபதியாக உள்ள  பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்  அடுத்த மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது  . இதையடுத்த ஜூலை 17 ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஜூலையில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் இதுவரை ஆளும் பா.ஜ.கவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தத்தம் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று  குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியபோது, "இந்த சந்திப்பின்போது பாஜக தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக எவ்வித தகவலையும் ராஜ்நாத் சிங் தெரிவிக்கவில்லை. அதிகாரபூர்வ வேட்பாளரை அறிவிப்பதில் ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நானும், மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து