தமிழ்நாட்டில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      தமிழகம்
Petrol price1(N)

சென்னை, தமிழ்நாட்டில் பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்,

தமிழக சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் காமராஜ் பேசினார், அப்போது அவர் பேசியதாவது: .

நடப்பு நிதியாண்டில் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தலா 40 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ 10 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல் அதிகபட்ச மழைமற்றும் பனிப்பொழிவிற்கு இலக்காகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம், கொள்முதல்செய்வதற்கேற்ற அளவைவிடக் கூடுதலாக இருக்கிறது. எனவே, அறுவடையாகும்நெல்லை உலர்த்த ஏதுவாக ஏற்கனவே சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களின் காலி இடத்தில் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ., 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 50 நெல் உலர்த்தும்களங்கள் அமைக்கப்படும்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 33 மண்டலங்களில்மொத்தம் 221 எண்ணிக்கையிலான சொந்த கிடங்கு வளாகங்கள் அமைந்துள்ளன.அவற்றில் பிரதான சாலை அருகில் அமைந்துள்ள 10 இடங்களான சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை மாவட்டம் நந்தனம்,தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவாரூர்மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகப்பட்டினம்மாவட்டம் கோயில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர்மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்களின்பயன்பாட்டுத் தேவையினை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய்நிறுவனங்களுடன் இணைந்து “அம்மா பெட்ரோல் பங்க்” தொடங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலிசட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூபாய் 2,450/-லிருந்து ரூபாய்2,995/- ஆக 01.04.2014 முதல் உயர்த்தி வழங்க உள்ளது. இதன் மூலம் 4,460 பருவகால பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு இரண்டு கோடியே எழுபத்தி இரண்டு லட்சம்கூடுதல் செலவாகும். சேமிப்புகிடங்குகளில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படும் பொருட்கள்தரமானதாகவும் உரிய எடையுடன் கூடியதாக உள்ளதா என்பதை உறுதி செய்யும்வகையில் பட்டை குறியீடுமுறை அறிமுகப்படுத்தப்படும்பொருட்டுதனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்கும் இயந்திரங்கள், ஸ்கேன் செய்யும்இயந்திரங்கள் மற்றும் அதற்கு உண்டான மென்பொருள் உள்ளிட்ட மொத்தம் 1762பட்டை குறியீடு இயந்திரங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் மூலம் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லினை தூற்றி சுத்தம்செய்து தரமான நெல் கொள்முதல் செய்வதற்கு கூடுதலாக 200 நெல் தூற்றும்இயந்திரங்கள் ரூபாய் ஐம்பது லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள தராசுகளுக்கு மாற்றாகவும்,குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான எடை அளவில்விநியோகம் செய்வதற்காகவும் கூடுதலாக 60 கிலோ திறன் கொண்ட 625மின்னணு எடைமேஜை தராசுகள் ரூபாய்ஐம்பது இலட்சம் செலவில் கொள்முதல் செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் முழு கணினிமயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. முழு கணினிமயமாக்கல்தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அனைத்துமுதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமைஅலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகியோருக்கு 51மடிக்கணினிகள் ரூ 50 லட்சம் செலவில் வழங்க உள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களின்செயல் திறனை மேம்படுத்த 500 பணியாளர்களுக்கு நவீன முறையில்தொடர் விநியோகப் பயிற்சி, தர கட்டுப்பாடு பணிகள், அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி, நவீன அரிசி ஆலை, சேமிப்புகளம், கிடங்குகள்ஆகியவற்றுக்கான சிறப்பு மேலாண்மைப் பயிற்சி ரூ.50 லட்சம் செலவில்வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து