முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் அ.விஜயகுமார் எம்.பி. பெற்றுக்கொண்டார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார்   கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அம்மாதிட்டம் நான்காம்கட்ட சிறப்பு முகாமில்,    பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை    பெற்றுக்கொண்டார்.

 நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட அம்மா திட்டத்தின், நான்காம் கட்ட சிறப்பு முகாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் நடைபெற்றது.மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார்  கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், விளாத்துறை ஊராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் வருவாய் கிராமம், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியிலும், கல்குளம் வட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், கோதநல்லூர் வருவாய் கிராமம், செம்பருத்திவிளை ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், தோவாளை வட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், தெரிசனங்கோப்பு வருவாய் கிராமம், தெரிசனங்கோப்பு அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற அம்மாதிட்டம், நான்காம் கட்ட சிறப்பு முகாமில், கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு அரசின் உதவித்தொகைகள் பெற, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர் திரு.அ.விஜயகுமார்  உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் மூலம்  அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் (கல்குளம்) ராஜாசிங், மூர்த்தி (தோவாளை), மண்டல துணை வட்டாட்சியர்கள் முருகன், தெல்லா, மண்டல ஆய்வாளர் விஜயகுமார், தக்கலை வருவாய் ஆய்வாளர் முருகன், கோதநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், முருகன், சுஜி,அரசு வழக்கறிஞர் ஞானசேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து