எம்எல்ஏக்களுக்கு சுவையான இடிந்தகரை மீன் விருந்து: அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      தமிழகம்
Jayakumar 2017 6 11

சென்னை, எம்எல்ஏக்கள் அனைவருக்கும் சுவையான இடிந்தகரை மீன் விருந்து அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார், தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் இன்பதுரை, எனது ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் உள்ள கூடங்குளம் இடிந்தகரை மீன்கள் தான் தமிழகத்திலேயே மிக ருசியான மீன்கள், எனவே இடிந்தகரை பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைத்து தந்தால் ஏற்றுமதி அதிகரிக்கும் . அந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் செழிக்கும், என்றார், உடனே சபாநாயகர் தனபால் அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்த சுவையான மீன் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களா என்று கேட்டார், இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் குறுக்கிட்டு, உறுப்பினர் சொன்ன அந்த சுவையான மீன்கள் எல்லோருக்கும் வழங்கப்படும். அவை பொரித்ததா, குழம்பு வைத்த மீனா., பச்சையானதாகவா என்று கேட்டதும் சபையில் சிரிப்பலை எழுந்தது,

மேலும் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்தினால் தான் மீனவர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயரும் என்பதற்காக ரூ 1 ஆயிரத்து 105 கோடியில் தூண்டில் வளைவுகள், மீன்கள் பதனிடும் பூங்காக்கள், சிறிய துறைமுகங்கள், தங்குதளங்களை அமைத்து வரலாற்று சாதனை படைத்ததார். இன்பதுரை தொகுதிக்கு ஏற்கனவே ரூ 87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மீன் பதனிடும் பூங்காக்களை அமைக்க ஆணையிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறிய அமைச்சர் ஜெயகுமார், உறுப்பினர் தனியார் பங்களிப்புடன் மீன் பதனிடும் பூங்கா அமைக்க முன் வருவோரை அடையாளம் காட்டினால் அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்,

அப்போது உறுப்பினர் இன்பதுரை குறுக்கிட்டு வரவிருக்கும்மீன் வளத்துறை மானியக்கோரிக்கையின் போது மீன் விருந்து வைப்பேன் என்று அமைச்சர் தெரிவித்தது போல எங்கள் தொகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மீன் பதனிடும் பூங்கா அறிவிப்பையும் சேர்த்து பந்தி வைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்,


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து