முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தின் மூலம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கருத்தரங்கை கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:முன்னாள் படை வீரர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினரை சுயதொழில் புரிய ஊக்குவிக்கும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது. பேரில் வீரவிருது பெற்றோர், போரில் ஊனமுற்றோர், போரில் உயிர்நீத்தோரின் விதவைகள், படைப்பணியின் காரணமாக உயிர்நீத்தோரின் விதவைகள் மற்றும் 20 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு எண்ணெய் நிறுவன விநியோக உரிமையில் 8 சதவீதம், சமையல் எரிவாயு விநியோக உரிமையில் 18 - 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மானியம்

விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டு தொழில்கள் செய்திட நபார்டு வங்கியின் மூலம் 8.5 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் மூலதனத்தில் 10- 20 சதவீதம் வரை கடனுதவி பெற்று சுய தொழில் புரியலாம். காதி கிராம தொழில் ஆணையம் மூலம் பாரதப்பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மூலிகை மருத்துவத்தொழில், தோட்டக்கலை, வாசனை பூக்கள் உற்பத்தி, ஏற்றுமதி, கால்நடை பராமரிப்பு, முகப்புரிமை, ஜேசிபி இயந்திரம் நிறுவுதல் ஆகிய பல்வேறு தொழில்களுக்கு இத்திட்டத்தின் மூலமாக 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்தின் மூலம் ரூ.25 லட்சம் வரை உற்பத்தி தொழில்களுக்கும், ரூ.10 லட்சம் வரை வியாபார சேவைகளுக்கும் கடன் பெறலாம். தொகுப்பு நிதி வங்கி கடன் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் 75 சதவீதம் வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தொழிற் கூடம் அமைக்க விரும்பும் சுயதொழில் புரியும் முன்னாள் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரரை பெரும்பான்மை பங்குதாரராக கொண்ட கூட்டமைப்பிற்கு 25 சதவீதம் தொழிற் கூட  மானியமாக அதிகபட்சம் ரூ.50,000- வரை வழங்கப்படுகிறது.முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் புரிய பல்வேறு திட்டங்களை நமது அரசு அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கலெக்டர் என்.வெங்கடேஷ்; தெரிவித்தார்கள். முன்னதாக உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) ராமலட்சுமி வரவேற்புரையாற்றி கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

பலர் பங்கேற்பு

இக்கருத்தரங்கில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் டி.பாரதி, வேளாண் அறிவியல் மைய முனைவர்.ஸ்ரீனிவாசன், கால்நடை பராமரிப்புதுறை துணை இயக்குநர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் இராஜராஜன், தாட்கோ மேலாளர் செல்வராஜ்., மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முன்னாள் படைவீரர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து