கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா சவான் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா சவான்  கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 பணி நியமன ஆணை

கன்னியாகுமரி மாவட்டம், பாகோடு பேரூராட்சியில், மீட்டர் ரீடராக பணிபுரிந்து வந்த  ரா.விஜயகுமார் என்பவர் 02.07.2017 அன்று காலமானார்.  அன்னாரது வாரிசுதாரரும், மகனுமான  வி.வி. ஷஜின் என்பவருக்கு, கப்பியறை இரண்டாம் நிலை பேரூராட்சியில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான ஆணையினையும், தேரூர் இரண்டாம் நிலை பேரூராட்சியில் மோட்டார் இயக்குபவராக பணிபுரிந்து வந்த  கு. பாலகிருஷ்ணன் என்பவர், 24.10.2016 அன்று காலமானார்.  அன்னாரது வாரிசுதாரரும், மகனுமான                       பா. சுரேஷ்குமார் என்பவருக்கு தேரூர் இரண்டாம்நிலை பேரூராட்சியில் காலியாகவுள்ள மோட்டார் இயக்குபவர் பணியிடத்திற்கான ஆணையினையும் என இரண்டு நபர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனத்திற்கான ஆணைகளை, கலெக்டர்                            சஜ்ஜன்சிங் ரா.சவான்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்                  வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ))  மாடசாமி சுந்தர்ராஜ், தேரூர் இரண்டாம்நிலை பேரூராட்சி செயல் அலுவலர் (பொ)  க.திருமலைக்குமார், கப்பியறை இரண்டாம்நிலை பேரூராட்சி செயல் அலுவலர்  கு. விஜயகுமார், கண்காணிப்பாளர்கள்  ராஜேஷ்வரன்,  செண்பகவல்லி ஆகியோர்கள் உடனுள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து