செஞ்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      விழுப்புரம்
road safety awerness meetting 2017 06 16

செஞ்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் செஞ்சியில் புதன் அன்று நடைபெற்றது.செஞ்சி போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் அப்பாண்டைராஜன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார்.

 நடவடிக்கை

 கூட்டத்தில் செஞ்சியில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் (டாடா ஏசி) மினி வேன்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. மினி வேன்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் போக்குவரத்து அலுவலர் மூலம் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வாகன உரிமையாளர் மீதும்  நடவடிக்கை எடுப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதே போன்று ஆட்டோவில் அதிக அளவு ஆட்களை ஏற்றிச்செல்வது மற்றும் ஆட்டோவில் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் ஆட்டோ உரிமம் மற்றும் ஓட்டனரின் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உரிமம் இல்லாமல் ஆட்டோவை ஓட்டுவது வரம்பு மீறி ஆட்டோவை ஓட்டிச்செல்வது ஆகிய  செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மினி வேன், ஆட்டோ, உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து