முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் குறித்து சத்துணவு அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது,

பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வருகின்ற சத்துணவு அமைப்பாளர்கள் குழந்தைகளுக்கு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சத்துணவை சமைத்து வழங்கிட வேண்டும். ஒவ்வொரு சத்துணவு அமைப்பாளர்களும் தாங்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்ற பொருட்கள் தரமாக பார்த்து வாங்குவதோடு, அப்பொருளின் காலாவதி தேதியினையும் பார்த்து அப்பொருளை வாங்கி பயன்படுத்த வேண்டும். தாங்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்ற பாத்திரங்கள் உள்ளிட்டவை சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். மேலும் சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய்கறிகள், கீரைகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும். குடிநீர்த்தொட்டியினை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தப்படுத்திட வேண்டும். கழிவுப்பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அதற்கான குப்பைத்தொட்டியில் முறையாக சேர்த்திட வேண்டும். சமையல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தன் சுத்தம் பேணுதல் மிக மிக முக்கியம். சமையல் அறை, பொருட்கள் இருப்பு அறை உள்ளிட்ட அனைத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சத்துணவு அமைப்பாளர்கள் சுத்தம் சுகாதாரத்தோடு, குழந்தைகளுக்கு சமையல் செய்து சத்துணவு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.

இப்பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.கவிக்குமார் அவர்கள் பயிற்சி விளக்கவுரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) எம்.மாரிமுத்துராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கே.ராமசாமி, ஆர்.சிவநேசன், எஸ்.பாஸ்கர், சண்முகம், ராமசுப்பிரமணியம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் மற்றும் கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து