முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் உணவு வியாபாரிகள் கொள்முதல் தொகைக்கேற்ப பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டமானது நாடு முழுவதும் 05,08,2011 செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி உணவு வியாபாரிகளுக்கு 05.08.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. ஆகையால் தற்சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்று கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 

கட்டாயம்

 

எனவே அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீ கடைக்காரர்கள், இனிப்பு கார வகைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சாலையோர உணவு கடைக்காரர்கள், பேக்கரி, இறைச்சி வியாபாரிகள், சில்லி சிக்கன் கடைகள், காய்கறி பழங்கள் வியாபாரம் செய்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் கேண்டீன் நடத்துபவர்கள், திருமண மண்டபங்களில் உணவு தயாரிப்பவர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் ஆகிய அனைத்து உணவு வணிகம் புரிபவர்களும் பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பதிவு மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்வது குற்றமாகும். எனவே அபராதம் மற்றும் தண்டனையின்றி உடனடியாக பதிவு அல்லது உரிமம் பெறவேண்டியது ஒவ்வொரு உணவு வியாபாரியின் கடமை மற்றும் கட்டாயமாகும். வருடத்திற்கு பன்னிரண்டு இலட்சத்திற்குட்பட்டு விற்று செய்பவர்கள் (வருடத்திற்கு ரூபாய் நூறு மட்டும்) செலுத்து சீட்டு (செலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி இணைய தள முகவரியில் தங்களது புகைப்படம், அடையாள அட்டை (அதாவது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று) மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அருகிலுள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

பதிவேற்றம் 

வருடத்திற்கு பன்னிரண்டு இலட்சத்திற்கு மேல் விற்று முதல் செய்து வருபவர்களில் உரிமக் கட்டணமாக சில்லரை விற்பனையாளருக்கு ஆண்டு ஒன்றுக்கு (ரூ. 2000-) ரூபாய் இரண்டாயிரமும், தயாரிப்பாளர்கள் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதாக இருந்தால் (ரூ. 3,000-) ரூபாய் மூன்றாயிரமும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்டதாக இருந்தால் (ரூ. 5000-) ரூபாய் ஐந்தாயிரமும் செலுத்து சீட்டு (செலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி மேற்கண்ட இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகல் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி-5. தொலைபேசி எண். 04342 230385 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு காலதாமதமின்றி உடனடியாக அனைத்து உணவு வியாபாரிகளும் பதிவு சான்று அல்லது உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராதத்தொகையினையும் தவிர்க்கலாம். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை கட்செவி (வாட்ஸ்அப்) எண். 94440 42322 வாயிலாக தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படும் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து