அம்மா இரண்டு சக்கர வாகன பழுது பார்க்க தொழிற்பயிற்சி கூடத்தில் பயிற்சிப்பெற சேர்கைக்கான ஆணை: அமைச்சர்கள் கே.சி.வீரமணி ,நிலோபர் கபீல் வழங்கினார்கள்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      வேலூர்
ph vlr a

தமிழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில்நெறி முறை வழிகாட்டி புத்தகங்களை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் வெளியிட்டார்கள்!!

நியமன ஆணை

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் தொழில் வழிகாட்டி பயிற்சி முகாமை துவக்கி வைத்து 60 நபர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் கையேடுகளை வெளியிட்டு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.


இந்த விழாவில் இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை என்.சுப்பையன், இ.ஆ.ப., திட்ட விளக்கவுரையாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்.இ.ஆ.ப., தலைமை வகித்தார்கள்.

விழாவில் வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தில் படித்த +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு தொழில் வழகாட்டி நிகழ்ச்சி மற்றும் அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு துறையின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். முகாமில் தேர்வாகதவர்களுக்கு அவர்களின் குறைகளை களைந்து மீண்டும் வெற்றி பெற தமிழக அரசு திறன் பயிற்சி மையத்தை ஒன்றையும் அமைத்து அவர்களுக்கு உதவிகளை புரிந்து வருகிறது. ஆகவே இந்த முகாமில் ஆலோசகர்கள் அளித்த அத்துணை ஆலோசனைகளையும் இளைஞர்கள் பெற்று தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அரசாக என்னென்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசினார்.

விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது.

மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இளைஞர்கள் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பினை பெற வேண்டும் இதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் உயரிய நோக்கமாகும். தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய குடுப்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் பயிற்சி பெறுவதற்காகவும் தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளியை பூர்த்தி செய்திடவும் இளைஞர்கள் சுய தொழில் துவங்க உதவிகள் புரிந்திடும் வகையில் முதற்கட்டமாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொன்றிலும் 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் 1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகன பழுதுபாhப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் ரூ 4 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 60 நபர்கள் என்ற விதத்தில் 3600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கிடும் வகையில் ரூ2.94 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வங்கி நிதி மற்றும் காப்பீடு போன்ற சேவைத்துறைகள் தொடர்பான பணிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் இளைஞகர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ18 இலட்சம் செலவில் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் இன்று முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வு செய்;யப்பட்ட இளைஞர்களுக்கு அந்த நிறுவனத்தின் கல்லூரியில் சம்பளம் மற்றும் தங்கும் வசதியுடன் ஓராண்டு கணினிபயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணி உடனடியாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இலவசமாக உயர்கல்வியையும் படிக்க வழிவகையையும் செய்துள்ளது. இது போன்று ஏழை எளிய மாணவ மாணவியர் பயன்பெற அரசு பல்வேறு தொழிற்நிறுவனத்தில் படித்த மாணவகர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விழாவில் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி மைய இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் தலைவர் த.வேலழகன,; வேலூர் வருவாய் கோட்டாச்சியர் ஏ.செல்வராஜ், எச்.சி.எல் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி சங்கரன், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் அருணகிரி, கருணாகரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்;.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து