தி.மலையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக புதிய கட்டிட திறப்பு விழா 3312 பயனாளிகளுக்கு ரூ. 7.50 கோடி கடனுதவி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo02

திருவண்ணாமலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்துவைத்து 3312 பயனாளிகளுக்கு ரூ. 7.50 கோடி மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினார்.

கடனுதவிகள்

 


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக புதிய கட்டிட திறப்பு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் தலைமை தாங்க, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரும் இணைப்பதிவாளருமான வே.நந்தகுமார் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா, செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் (பொ) எம்.பாரதிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் புதிய கட்டிடத்தை திறந்துவைத்து 3312 பயனாளிகளுக்கு ரூ. 7.50 கோடி மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோலைகளையும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்தின், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கோ.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினரும் தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவருமான எஸ்.ஆர்.தருமலிங்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, துணைப்பதிவாளர்கள் ஆ.மாதவி, இரா.முனிராஜ், கோ.யோகவிஷ்ணு, எ.நீதிமோகன், மு.மோகன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ.மணி, ஒ.பவானி, ஏ.ஜி.பஞ்சாட்சரம், என்.தாமரை செல்வி நைனாகண்ணு, ஆர்.ரமணி, பி.சுதா, ஏ.கே.ஆர்.ஜெயபிரகாஷ், எஸ்.கிருஷ்ணன், எஸ்.தர்மதுரை, எம்.வேலு, வி.சாந்தா, ஆசிரியர் பணியாளர் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் டி.செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சரக துணைப்பதிவாளர் ஏ.சரவணன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து