முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்புல்லாணியில் புதிய தொடக்கப் பள்ளி கட்டிடம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-திருப்புல்லாணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ஒருங்கிணைந்த ஊரக பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக் கட்டடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். அதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாட்களில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள், சாதனைகள் குறித்த சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டார். விழாவிற்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு,  பள்ளி செல்லும்  மாணவ, மாணவியரின் நலனுக்காக எண்ணற்ற மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறையினை மேம்படுத்திடும் விதமாகவும்,  மாற்றுக் கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டும்படியாக ஏராளமான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறையின் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தப்படும். 
 மேலும், தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும்  திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில் 5லட்சம்  மாணவ, மாணவியர்களுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.26 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய கட்டிடப் பணிகளும், ரூ.141 லட்சம் மதிப்பில் 171 பள்ளிக் கட்டிட மராமத்துப் பணிகளும், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.129.80 லட்சம் மதிப்பில் 11 புதிய வகுப்பறை கட்டிட பணிகளும், ரூ.101 லட்சம் மதிப்பில் 126 பள்ளிக் கட்டிட மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பில் 48 பள்ளிகளில் புதிய சமயலறை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடமும், ரூ.235 லட்சம் மதிப்பில் பல்வேறு அடிப்படை தேவையுள்ள கட்டிடப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அவற்றில் 12 இடங்களில் அங்கன்வாடி கட்டிடங்களும், 4 இடங்களில் நியாய விலைக்கடைகளும் உள்ளடக்கம் ஆகும்.  குறிப்பாக எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உச்சிப்புளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர், மிதிவண்டி நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளும், ராமநாதபுரம் நகரில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் பென்ஞ்ச், மேசை உள்ளிட்ட தளவாட சாமான் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக் கல்லூரி அமைத்திட உத்தரவிடப்பட்டு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் இராமநாதபுரம்  மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு விவசாயக் கல்லூரி அமைப்பதற்கு வலியுறுத்தி அதற்குத் தேவையான அனைத்து  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஐ.ரோஜா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து