செந்துறை பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      திண்டுக்கல்
natham

 நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 கண்மாய் குளங்கள் உள்ளது. இதில் செந்துறை பகுதியில் உள்ள சிரங்காட்டூப்பட்டியில் உள்ள மூங்கில் குளம்,ஆனாகுளம்,பாலாறு கண்மாய், பூதகுடி பக்கத்தில் உள்ள மீரா உஷேன் குளம்,செல்லப்பநாயக்கன்பட்டி பிள்ளைகுளம், நடுமண்டலம் பெரிய ரெட்டிகுளம், பாப்பாபட்டி சிவியன் குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய் குளங்களில் து£ர்வாரப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டு உள்ளதை   மாவட்ட கலெக்டர் டி.ஜீ.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் கோசுகுறிச்சி பகுதியில் பாலாறு பாலத்தின் அருகே புதிய அணை கட்டப்படும் ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டதையும்,இதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் செந்துறை பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின் போது திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், நத்தம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தளபதிராம்குமார்,தாசில்தார் ராமையா,யூனியன் ஆணையாளர்கள் முனியாண்டி,குருவானந்தம்,வருவாய் ஆய்வாளர்கள் இளஞ்செல்வன்,சுந்தரபாண்டியன் உள்பட வருவாய், ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள்,பணியாளர்கள் உடனிருந்தனர்.

 


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து