முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் பெண் போலீசார் குத்திக்கொலை - ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

பெய்ரூட் : இஸ்ரேலில் பெண் போலீசார் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு முதன் முதலாக இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.

ஐ.எஸ். இயக்கமானது உலக முழுவதும் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. லண்டன் நகரில் சமீபத்தில் இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் உஷார் மிகுந்த இஸ்ரேல் நாட்டிலும் புனித நகரான ஜெரூசலத்தின் பழைய நகரத்தில்   நேற்றுமுன்தினம் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் குத்திக்கொலை செய்யப்பட்டார். பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகளை இஸ்ரேல் போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்பதை இஸ்ரேல் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் இஸ்ரேல் பெண் போலீசாரை குத்திக்கொலை செய்தது நாங்கள்தான் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. இதுவரை இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.இயக்கம் பொறுப்பேற்றது இல்லை. தற்போதுதான் முதன் முதலாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜெரூசலத்தில் யூதர் கூட்டத்தின் மீது குறிவைத்தோம். ஆனால் அந்த குறியில் பெண் போலீஸ்தான் சிக்கியுள்ளார் என்று ஐ.எஸ்.சார்பாக ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் கடைசி அல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரம்சான் நோன்பு 3-வது வார முடிவில் ஜெரூசலத்தின் கிழக்குப்பகுதி மற்றும் மேற்குகரை பகுதியில் உள்ள அல்அஹ்சா மசூதி வளாகம் அருகே இந்த தாக்குதல் நடந்தது. பாலஸ்தீனர்களின் 3-வது புனித பூமியாக கருதப்படும் இந்த  மசூதி அருகே தாக்குதல் நடந்,துள்ளது. தாக்குதல் நடந்தபோது ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து